tamilnadu

img

எதிர்க்கட்சி அரசுகளைக் கவிழ்க்க பாஜக சதி!

லக்னோ:
எதிர்க்கட்சிகள் ஆட்சியிலிருக்கும் மாநில அரசுகளைகவிழ்க்க, பாஜக தொடர்ந்து சதி செய்து வருவதாக, உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவருமான மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார்.கர்நாடக மாநிலத்தில், காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சி எம்எல்ஏ-க்கள் 16 பேர் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளனர். பாஜக-வின் தூண்டுதலின் பேரிலேயே இவர்கள் பதவியை ராஜினாமா செய்திருப்பதாக குற்றம்சாட்டு எழுந்துள்ளது. மற்றொரு பக்கம், கோவா மாநிலத்தைச் சேர்ந்த 10 காங்கிரஸ் எம்எல்ஏ-க்களையும், பாஜக தன்பக்கம் இழுத்து, கட்சியில் சேர்த்துக் கொண்டுள்ளது.

இந்நிலையில்தான், பாஜக-வின் இந்த ஜனநாயக விரோத நடவடிக்கைகள் குறித்து, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளார். “பணபலத்தைப் பயன்படுத்தியும், மின்னணு வாக்கு ப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்தும் மத்தியில் ஆட்சியை பிடித்த பாஜக, தற்போது, பாஜக அல்லாத கட்சிகள்ஆளும் மாநில அரசு களைக் கவிழ்க்கும் சதித்திட்டத்தையும் நிறைவேற்றி வருகிறது.கர்நாடகாவிலும், கோவாவிலும் காங்கிரஸ் எம்எல்ஏ-க்களை இழுக்க பாஜக முயன்று வருகிறது, இது, ஜனநாயகத்தின் மீது விழுந்த கறை; இதற்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று மாயாவதி கூறியுள்ளார்.“கட்சி தாவும் எம்எல்ஏ-க்களின் பதவியைப் பறிக்கும்வகையில், சட்டம் கொண்டு வருவதற்கு இதுவே நல்ல தருணம்” எனவும் மாயாவதி குறிப்பிட்டுள்ளார்.

;